Home /News /tamil-nadu /

ஒலி பெருக்கியில் கடத்தப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: மதுரை விமானநிலையத்தில் அதிரடி

ஒலி பெருக்கியில் கடத்தப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: மதுரை விமானநிலையத்தில் அதிரடி

 மதுரை விமான நிலையம்

மதுரை விமான நிலையம்

மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து சோதனை

  • News18
  • Last Updated :
    துபாயிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணியிடம் சோதனை செய்தபோது ஒலி பெருக்கியில் (Speaker) மறைந்து கடத்தி வரப்பட்ட 44 தங்க தகடுகள் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

    துபாயிலிருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில்
    வந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்க இலாக்க நுண்ணறிவு பிரிவினர் அவரை தனியாக அழைத்து விசாரனை செய்த போது அவரிடமிருந்து 26 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ள தங்க தகடுகளை ஒலி பெருக்கி (Speaker) மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர்.

    மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையில் வெளி நாட்டில் இருந்து வரும் விமான பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்ட போது கடலூரைச் சேர்ந்த சர்புதின் அனர் பாட்ஷா
    என்பவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் அவர் ஒலி பெருக்கியில் (Speaker) மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அவரிடம் 44 தங்க தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 26 லட்சத்து 49 ஆயிரம் என்று தெரியவந்தது.

    இதனையடுத்து அவரிடமிருந்து தங்க தகட்டை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றி சர்புதினை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Also see:

    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Smuggling

    அடுத்த செய்தி