முகக்கவசம் அணியாமல் சென்றதாக தமிழகம் முழுவதும் கடந்த 8 ஆம் தேதி முதல் 43,3756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், முக கவசம் அணியாதவர்களுக்கு கடந்த 8 ஆம் தேதி முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி, நேற்று மட்டும் 30,494 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்ததாக, கடந்த 8 ஆம் தேதியில் இருந்து நேற்று வரை 14,171 வழக்குகள் பதிவுசெய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்ததற்காக, நேற்று ஒரே நாளில் 684 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில்
கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
Must Read : 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டம்?
இந்நிலையில், தமிழகம் முழுவதும்,
இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.