மாமல்லபுரத்தில் இருந்த குரங்குகள் எங்கே?

மாமல்லபுரத்தில் இருந்த குரங்குகள் எங்கே?
மாமல்லபுரம்
  • News18
  • Last Updated: October 13, 2019, 10:44 AM IST
  • Share this:
மாமல்லபுரத்தில் இருந்து 42 குரங்குகளை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான நட்புரீதியிலான சந்திப்பு தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் சென்னை வந்த ஷி ஜின்பிங்கிற்கு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இருநாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு நடைபெறவிருந்ததால் அங்கு சுற்றித்திருந்த குரங்களை பிடிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். முன்னதாக வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் மாமல்லபுரத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் அங்கு சுற்றித்திரிந்த குரங்குகளை வலைகள், கூண்டுகளை வைத்து பிடித்தனர்.


சுமார் 42 குரங்குளை பிடித்த அதிகாரிகள் அதை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காடுகளில் விட்டுவிடுவதாக தெரிவித்துள்ளனர்.

Also watch

First published: October 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்