Home /News /tamil-nadu /

டீ கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் திருட்டு

டீ கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் திருட்டு

டீ கடை

டீ கடை

இன்று காலை வந்த போது டீக்கடையின் இரும்பு ஷட்டர் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் வைத்திருந்த 40,000 பணத்தையும் சிகரெட் பாக்கெட்டுகளையும் மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

  • News18
  • Last Updated :
    பல்லாவரம் அருகே டீ கடையின் பூட்டை உடைத்து 40,000 ரூபாய் பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளது.

    சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் தென்றல் நகர்
    பகுதியில் KRG கேண்டீன் என்ற டீக்கடை இயங்கி வருகிறது. இதை சவரிமுத்து என்பவர் நடத்திய வருகின்றார். இவர் அனகாபுத்தூர் திமுக நகர வர்த்தகர் அணி அமைப்பாளர் ஆவர்.

    Also read... நீட் பயிற்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு உடனே வகுப்புகளை தொடங்க வேண்டும் - ராமதாஸ்!

    நேற்று வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றவர், மீண்டும் கடையை திறக்க இன்று காலை வந்த போது டீக்கடையின் இரும்பு ஷட்டர் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் வைத்திருந்த 40,000 பணத்தையும் சிகரெட் பாக்கெட்டுகளையும் மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    Also read... புதுச்சேரிக்கும் பரவியது ஒமைக்ரான் - இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

    உடனே சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி