Black fungus : தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் 400 பேர் பாதிப்பு: நிபுணர்கள் ஆலோசனை

கருப்பு பூஞ்சை பாதிப்பு

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    சென்னை தலைமைச் செயலகத்தில் கருப்பு பூஞ்சை நோய் கண்காணிப்பு மற்றும் மருந்து விநியோகம் குறித்து 13 நிபுணர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவர்கள் நாராயணபாபு, மோகன் காமேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கருப்பு பூஞ்சை என்பது புதிய நோய் இல்லை என்றனர். கொரோனா முதல் அலையின்போது கருப்பு பூஞ்சை பாதிப்பு இல்லை என்றும், எளிய சோதனை மூலமாகவே கருப்பு பூஞ்சை தொற்றை அறிய முடியும் என்றும் அவர்கள்தெரிவித்தனர்.

    கண் வீக்கம், முக வீக்கம், மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அனுக வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். கருப்பு பூஞ்சை தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

    Must Read : பிரதமர் மோடியை 30 நிமிடம் காக்க வைத்தாரா மம்தா பானர்ஜி? - தலைமைச் செயலாளர் டெல்லிக்கு அழைப்பு.. மேற்குவங்கத்தில் உச்சகட்ட பரபரப்பு!

    இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் தனியாக 10 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு, தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளதாக தமிழக வீட்டுவசதிதுறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: