Home /News /tamil-nadu /

ரவுடி படப்பை குணாவுக்கு உதவியதாக 40 காவலர்கள் பணியிட மாற்றம் - டி.ஜி.பி அதிரடி உத்தரவு

ரவுடி படப்பை குணாவுக்கு உதவியதாக 40 காவலர்கள் பணியிட மாற்றம் - டி.ஜி.பி அதிரடி உத்தரவு

Padappai Guna

Padappai Guna

பணியிடம் செய்யப்பட்ட 40 பேர்களும் சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    காஞ்சிபுரத்தில் ரவுடி படப்பை குணாவுக்கு உதவி செய்ததாக மூன்று காவல் ஆய்வாளர்கள், 4 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 40 காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.

    தற்போது தலைமறைவாகியுள்ள குணாவை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. படப்பை குணா தலைமறைவாக இருந்த நிலையில் அவரது மனைவி எல்லம்மாளை கடந்த 9-ம் தேதி கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர். இதற்கிடையில், குணாவின் மனைவி எல்லாம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    Also read:  கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் விடுவிப்பு.. குற்றத்தை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோல்வி!

    அந்த மனுவில், ‘தனது கணவரைக் காவல்துறையினர் என்கவுண்டர் செய்யக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘குணாவை என்கவுண்டர் செய்யும் திட்டம் இல்லை. அவர் சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    Also read:   அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: கார், பைக் பரிசு வழங்கும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி

    இந்தநிலையில், படப்பை குணாவுக்கு உதவி செய்ததாக மூன்று காவல் ஆய்வாளர்கள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, மணிமங்கலம் காவல் ஆய்வாளர் பாலாஜி, ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் ஆகிய 3 காவல் ஆய்வாளர்கள், பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் டி.ஜி.பி சைலேந்திர பாபு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    படப்பை குணாவுக்கு உதவியதாக 3 காவல் ஆய்வாளர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக 40 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

    Also read:  மிகவும் சலிப்பான வேலையை கொடுத்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த நபர்! இழப்பீடு வழங்க உத்தரவு

    ஏ ப்ளஸ் நிலை ரவுடியான படப்பை குணாவிற்கு பலவிதமான வழிகளில் உதவி செய்த 8 காவலர்கள், 10 முதன்மை காவலர்கள், 15 தலைமை காவலர்கள், 4 உதவி ஆய்வாளர்கள், 3 காவல் ஆய்வாளர்கள் என 40 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் எஸ்.ஐ அசோகசக்கரவர்த்தி ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், வாலாஜாபாத் காவல்நிலைய எஸ்.ஐ எல்.வெங்கடேசன் மற்றும் எஸ்.வி சத்திரம் எஸ்.ஐ விஜயகாந்த் ஆகிய இருவரும் விருதுநகர் மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    பணியிடம் செய்யப்பட்ட 40 பேர்களும் சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

     
    Published by:Arun
    First published:

    Tags: Crime News, Police

    அடுத்த செய்தி