Home /News /tamil-nadu /

திண்டுக்கலில் இறப்பு வீட்டில் கலந்து உணவு உண்ட 40 பேருக்கு வாந்தி, மயக்கம் - அரசு மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கலில் இறப்பு வீட்டில் கலந்து உணவு உண்ட 40 பேருக்கு வாந்தி, மயக்கம் - அரசு மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல் மருத்துவமனை

திண்டுக்கல் மருத்துவமனை

திண்டுக்கல் அருகே துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திண்டுக்கல் அடுத்துள்ள குட்டத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் செபஸ்தியார். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று  இறந்துள்ளார். இவரது துக்க நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் இன்று 28.12.21 அவரது வீட்டில் விருந்து நடைபெற்றுள்ளது. இதற்காக பித்தளை பட்டியில் இருந்து உணவு வாங்கி வந்து பரிமாறி உள்ளனர்.

உணவை சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகிலுள்ள வட்டப்பாறை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Dindigal

அடுத்த செய்தி