திண்டுக்கல்லில் ரூ.600 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் மோசடி - தந்தை, மகன் கைது

திண்டுக்கல்லில், மாலத்தீவில் 200 கோடி ரூபாய்க்கு கான்ட்ராக்ட், அதன் பெயரில் 600 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக்கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 40 லட்ச ரூபாயை மோசடி செய்த தந்தை மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்தவர் 58 வயதான ஜீவா. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதே கொடைக்கானலைச் சேர்ந்த 63 வயதான சஞ்சீவி. இவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் 30 வயதான இமானுவேல். சஞ்சீவியும் அவரது மகன் இமானுவேலும், மாலத்தீவில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமானப் பணி வாய்ப்பு பெற்றுத் தருவதாக ஜீவாவிடம் தெரிவித்துள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் செலவு செய்து பணி மேற்கொள்ளும் அளவுக்கு பணம் இல்லை எனக்கூறியுள்ளார்.

கட்டுமான பணி வாய்ப்பு பெற்றுவிட்டால், அதைக்காட்டி வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் 600 கோடி ரூபாய் கடன் வாங்கிக்கொள்ளலாம் என்றும், அதையும் தாங்களே வாங்கித் தருவதாக ஜீவாவிடம் கூறியுள்ளனர். அதற்கு 40 லட்சம் ரூபாய் மட்டும் கட்டினால் போதும் என்று சொல்லியுள்ளனர்.

தந்தை, மகனின் ஆசை வார்த்தையில் மயங்கிய ஜீவா, அவர்கள் கேட்ட 40 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். 200 கோடி ரூபாய் கான்ட்ராக்ட், 600 கோடி ரூபாய் கடனுக்காக காத்திருந்த ஜீவாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 8 மாதமாக இதோ அதோ என கூறி காலம் கடத்தி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த ஜீவா பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.


அப்போது இருவரும் தங்கள் சுய ரூபத்தை காட்டியுள்ளனர். பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த ஜீவா, இந்த மோசடி குறித்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகத்தில்உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

மேலும் படிக்க...10 மாதங்களுக்கு முன் காணாமல் போன மூதாட்டி... குடிபோதையில் மகனே கொன்று புதைத்தது அம்பலம்... துப்பு துலங்கியது எப்படி?வழக்கு பதிவு செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்யத் துவங்கியவுடன் தந்தையும், மகனும் தலைமறைவாகிவிட்டனர். தந்தையும் மகனும் கோவையில் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார், வெள்ளிக்கிழமை அவர்களை கைது செய்து திண்டுக்கல் அழைத்துச் சென்றனர்.

 

பின்னர் இருவரையும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடன், அதிக வட்டி போன்று நடைமுறையில் சாத்தியமில்லாத பண பலன்கள் தொடர்பாக யாரும் கூறினால், அவர்களை நம்பி பணத்தை கொடுக்க வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading