கோவையில் 4 வயது சிறுமி காணாமல் போன விவகாரம்... போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு...!

ஆயுத பூஜை, தீபாவளி என எந்தப் பண்டிகையையும் கிராமத்தினர் கொண்டாடாமல் சிறுமியின் நினைவாகவே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்

கோவையில் 4 வயது சிறுமி காணாமல் போன விவகாரம்... போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு...!
காணாமல் போன குழந்தை ஷாமினி
  • News18
  • Last Updated: October 28, 2019, 5:02 PM IST
  • Share this:
கோவை அருகே, 4 வயது சிறுமி காணாமல் போய், 23 நாட்கள் ஆன நிலையில் போலீசார் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான ஜெயக்குமார். இவரது மனைவி கவிதா.இவர்களுக்கு 7 வயதில் வெற்றிவேல் என்ற மகனும் 4 வயதில் ஷாமினி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

ஜெயக்குமார் தம்பதி, அதே ஊரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 5 ம் தேதி வீட்டின் அருகில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த ஷாமினி திடீரென காணாமல் போனார்.


இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை தேடி வருகின்றனர். சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களும் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் பலனில்லை.

சிறுமி காணாமல் போய் 23 நாட்கள் ஆன நிலையில், எந்த தகவலும் கிடைக்காமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர். இதனால் குமாரபாளையம் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் குமாரபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சுமார் 90 குடும்பங்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் புறக்கணித்துள்ளனர். புத்தாடை, பட்டாசு உள்ளிட்டவற்றை புறக்கணித்த கிராம மக்கள், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடவில்லை.

Loading...

சிறுமி ஷாமினி கிடைக்கும் நாளே தங்களது கிராமத்திற்கு தீபாவளி எனவும், அதுவரை எந்த பண்டிகையும் கொண்டாட போவதில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்

சிறுமியை கண்டுபிடிக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், 23 நாட்களாகியும் சிறுமி குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை எனவும் கூறிய கிராமவாசிகள், அலட்சியமாக செயல்படும் காவல் துறையை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

Also see...
First published: October 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com