புதுக்கோட்டையில் மின்னல் தாக்கி 4 பெண்கள் பரிதாப பலி... 30 பேர் படுகாயம்

புதுக்கோட்டையில் மின்னல் தாக்கி 4 பெண்கள் பரிதாப பலி... 30 பேர் படுகாயம்
  • Share this:
புதுக்கோட்டை வைத்தூர் அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியதில் நான்கு பெண்கள் உயிழந்தனர்.

செம்பாட்டூரில் வயலில் 40 க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் திடீரென்று மின்னல் தாக்கியுள்ளது.

இதில், வயலில் வேலை செய்து வந்த பெண்கள் நான்கு பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி நேரில் ஆறுதல் கூறினார்.

Also Watch

Loading...

First published: October 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...