• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையை ஒட்டிய தாம்பரத்தில் பாலியல் தொழில்: 4 பெண்கள் மீட்பு - இளைஞருக்கு சிறை

சென்னையை ஒட்டிய தாம்பரத்தில் பாலியல் தொழில்: 4 பெண்கள் மீட்பு - இளைஞருக்கு சிறை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சென்னையை ஒட்டிய தாம்பரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட நான்கு பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
    சென்னையை ஒட்டிய மேற்கு தாம்பரம், முத்துலிங்கம் தெருவில் பிரபல சினிமா தயாரிப்பாளருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மசாஜ் சென்டர் நடத்தப் போவதாக வாலிபர் ஒருவர் வாடகைக்கு வந்துள்ளார். இந்நிலையில் அந்த கட்டிடத்தில் தொடர்ந்து இளம்பெண்கள் வந்து செல்வதாக தாம்பரம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு வாலிபர் ஒருவர் நான்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த நபர் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சடையப்பன் (28) என்பது தெரியவந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் அந்தப் பெண்கள் ஜாபர்கான்பேட்டை, கொடுங்கையூர், அஸ்தினாபுரம், பல்லாவரம் பகுதிகளை சேர்ந்த 21 முதல் 28 வயது உடைய பெண்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சடையப்பனை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்களை நீதிமன்ற உத்தரவின்படி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: