• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண வசூல் நிறுத்தம் என அறிவிப்பு!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண வசூல் நிறுத்தம் என அறிவிப்பு!

கோப்புக் காட்சி

கோப்புக் காட்சி

சென்னை ஓஎம்ஆரில் உள்ள ராஜீவ் காந்தி சாலையில் சுங்க வசூல் நிறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழக சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலைத்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார்.

    அந்த அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதையொட்டி, ராஜீவ் காந்தி சாலையில் (OMR) உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது வருகின்ற 30.08.21 முதல் நிறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். தொடர்ந்து, அந்த பகுதி மக்கள் அரசுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்தகோரி பலமுறை கோரிக்கை வைத்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    Also read: வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும்: செப்.1 முதல் தமிழக பள்ளிகளில் புதிய விதிமுறைகள்!

    முன்னதாக, கடந்த ஆட்சியின் போது, இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதுதொடர்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

    இந்த சூழலில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்பு அமைச்சர் எ.வ.வேலு, அந்த சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கான சாத்தியக்கூறு என்னவென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, இதுதொடர்பான அறிக்கை முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: