ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோவையில் தொடர்ச்சியாக நடந்த திருட்டுச் சம்பவங்கள்.. ஆந்திராவைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் கைது..

கோவையில் தொடர்ச்சியாக நடந்த திருட்டுச் சம்பவங்கள்.. ஆந்திராவைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் கைது..

கைதனா 4 பேர்

கைதனா 4 பேர்

கோவை அருகே ஆந்திரா கொள்ளை கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதியில் தொடர்ச்சியாக வீடு புகுந்து திருடுதல் மற்றும் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்து வந்தது. அதன்பேரில் கருமத்தம்பட்டி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவிநாசி சாலையில் சென்னியாண்டவர் கோவில் அருகே வழக்கமான வாகன சோதனையில் கருமத்தம்பட்டி போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை  நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்  அவர்கள் ஆந்திர மாநிலம்  குண்டூர் பகுதியைச் சேர்ந்த  சீனு, சுப்பாராவ், அங்கம்மா ராவ் மற்றும் அவரது மனைவி அங்கம்மா என்பது தெரியவந்தது. இவர்கள் நான்கு பேரும் கருமத்தம்பட்டி  பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் சின்னமோப்பிரிபாளையத்தில் உள்ள ஜடி ஊழியர் யுவராஜ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்துள்ளனர்.

மேலும் கருமத்தம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர் நாகமணி என்பவரிடம் சக ஊழியராக பணிபுரியும் ராமு என்பவரை உருட்டுக்கட்டையால் தாக்கி  6 பவுன் தங்க நகை பறிப்பு  சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் படிக்க..

.Cyclone Nivar | புயல் கரை கடந்த பிறகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை மக்கள் வெளியே வரவேண்டாம்.. அமைச்சர் ஆர்.பி உதயகுமார்..

13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி, காவல் ஆய்வாளர் உட்பட 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது..

இதனையடுத்து  அவர்களிடமிருந்து 24 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலி தங்கக்கட்டிகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கருமத்தம்பட்டி போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Andhra Pradesh, Arrested, Coimbatore, Crime | குற்றச் செய்திகள்