• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அத்திவரதர் தரிசனத்தின்போது கூட்டநெரிசல்: 4 பேர் உயிரிழப்பு

அத்திவரதர் தரிசனத்தின்போது கூட்டநெரிசல்: 4 பேர் உயிரிழப்பு

  • News18
  • Last Updated :
  • Share this:
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

அத்திவரதர் உற்சவத்தின் 18ம் நாளான இன்று ஊதா நிற பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவோணம் நட்சத்திரம் காரணமாக இன்று அதிகாலையிலிருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால், காஞ்சிபுரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், சாமி தரிசனம் செய்து விட்டு வந்த சென்னையை சேர்ந்த ராதாமணி, நடராஜன் மற்றும் ஆந்திராவை சேர்ந்த கெங்காலட்சுமி, சேலத்தை சேர்ந்த ஆனந்தவேல் ஆகிய 4 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேரும் உயிரிழந்தனர்.

முதல்வர் இரங்கல் - உதவி

இதனிடையே, அத்தி வரதரைக் காணவரும் மக்களுக்கு பாதுகாப்பு வசதி – பொதுக்கழிப்பிட வசதி போன்றவற்றை முறையாக செய்திடாத நிலையில் அரசு உள்ளதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அத்திவரதரை தரிசிக்க வந்து உயிரிழந்த 4 பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ருபாய் முதலைமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: