திருத்தணியில் இளைஞர் ஓடஓட விரட்டி படுகொலை - கைதானவர்களுக்கு ’மாவுக்கட்டு’

news18
Updated: August 18, 2019, 3:51 PM IST
திருத்தணியில் இளைஞர் ஓடஓட விரட்டி படுகொலை - கைதானவர்களுக்கு ’மாவுக்கட்டு’
சரணடைந்த இளைஞர்கள்
news18
Updated: August 18, 2019, 3:51 PM IST
திருத்தணியில், 22 வயதான மகேஷ் என்ற இளைஞர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 6 ஆண்டுக் கால பகையுணர்ச்சியில் இந்தப் படுகொலை மூன்றாவதாக நடந்த கொலை என்கின்றனர்.

திருத்தணியில் நடந்து சென்ற இளைஞர் மகேஷ், அடையாளம் தெரியாத கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் ஒரு இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் கைகளில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவரைத் துரத்தினர்.


இளைஞர் பீதியில் ஓடி அருகில் இருந்த ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தார். விடாமல் அவரைத் துரத்திச் சென்ற கும்பல், அவரை ஓட்டலுக்குள் வைத்தே சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தப்பியோடிவிட்டது. இந்த சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் சனிக்கிழமை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.இந்தப் படுகொலை வழக்கில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், வேலுார் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள நாகவேடு கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான மகேஷ் என்பது தெரியவந்தது. அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என மேலும் போலீசார் விசாரி்தத போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின

Loading...

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே உள்ளது பெருமாள்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் தான் தற்போது கொலை செய்யப்பட்ட மகேஷ்

பெருமாள்பட்டு கிராமத்தில் கடந்த 2013-ம் ஆண்டில் வாலிபால் போட்டியில் ஏற்பட்ட பிரச்னையால், இன்பராஜ் மற்றும் ஜப்பான் என்ற விமல் ஆகிய இருவரின் தலைமையில் தனிக் குழுக்கள் பிரிந்து செயல்படத் தொடங்கின

இவற்றில் இன்பராஜ் குழுவைச் சேர்ந்தவர் தான் இளைஞர் மகேஷ். இந்த குழுக்கள் இடையேயான மோதலில், விமல் தரப்பைச் சேர்ந்த லல்லு என்பவரை இன்பராஜ் தரப்பினர் முதன் முதலில் படுகொலை செய்தனர்

இதற்குப் பழி வாங்கும் விதமாக 6 ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி, இன்பராஜின் நண்பரான விக்னேஷ் என்ற இளைஞர் விமல் தரப்பால் படுகொலை செய்யப்பட்டார்.

விக்னேஷ் படுகொலையை நேரில் பார்த்தவரான மகேஷ், கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்து வந்தார்.

இந்தப் படுகொலை சம்பவங்களால் பீதியடைந்த மகேஷ் குடும்பத்தினர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெருமாள்பட்டில் இருந்து தங்கள் சொந்த ஊரான அரக்கோணம் அருகே உள்ள நாகவேடு கிராமத்திற்கு சென்றுவிட்டனர்

இதற்கிடையே விக்னேஷ் கொலைக்குப் பழிவாங்குவதற்காக ஆகஸ்ட் 1-ம் தேதி, வேப்பம்பட்டில் ஒரு சலுான் கடையில் இருந்த தினேஷ் என்ற இளைஞரை இன்பராஜ் தரப்பினர் கொடூரமாகத் தாக்கினர். அதில் தினேஷ் பிழைத்து விட்டார்

தினேஷ் கொலை முயற்சியில் இன்பராஜ் ஆதரவாளர்கள் நான்கு பேர் கைதாகியுள்ளனர். கைதான நபர்கள், வெள்ளிக்கிழமை அன்று திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைதான 4 பேரின் கைகால்களில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ள புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.நாகவேடு கிராமத்தில் இருந்து திருத்தணி வந்த மகேஷ் அவர்களைப் பார்த்து விட்டு ஊர் திரும்புவதற்காக பேருந்து ஏறச் சென்ற போதுதான் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்கி்ன்றனர் போலீசார்.

இந்தக் கொலை வழக்கில், சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் தலைமையிலான கும்பலின் பின்புலம் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் திருத்தணி போலீசார் விசாரி்த்து வருகின்றனர்.

6 ஆண்டுகளாக இந்த இரு குழுக்களிடையே நிலவிவரும் மோதல்கள் குறித்து வேப்பம்பட்டு மற்றும் செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்குத் தெரிந்திருந்தும் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
First published: August 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...