சாலை விதிகளை மீறி பயணம் செய்யும் மாணவர்கள்... ஒரே பைக்கில் 4 பேர் பயணம்!

சாலை விதிகளை மீறி பயணம் செய்யும் மாணவர்கள்... ஒரே பைக்கில் 4 பேர் பயணம்!
இரு சக்கர வாகணத்தில் பயணம்
  • Share this:
வாழ்க்கை பயணத்தின் ஒரு முக்கியமான அங்கம் சாலை பாதுகாப்பு. இது தற்போது நாட்டின் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 1.10 லட்சம் பேர் வரை சாலை விபத்தினால் இறப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

உலகிலேயே அதிக சாலை போக்குவரத்து வசதிகளை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகளின் பங்கு அளப்பரியது. ஆனால், வசதிகளை அனுபவிப்போர் அதன் விதிகள் குறித்து கவலைப்படுவதில்லை. விழிப்புணர்வு இல்லாததால் விபத்துக்கள் அதிகம் நிகழ்கின்றன. ஒரு நொடி விபத்தால் பலரின் வாழ்க்கையே முடங்கி போகிறது.

இந்திய சாலை போக்குவரத்து சட்டத்தில் ‘‘எவ்வாறு பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட வேண்டும்’’ என்ற விதிகள் தெளிவாக கூறப்பட்டுள்ளது. நவீன காலத்தில் இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக செல்வது, பொது நலம் என்ற போக்கை கைவிட்டு சுயநலத்துடன் செயல்படுவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.


சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்பால் பலரின் வாழ்க்கை நிற்கதியாவதை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவரும் சாலை விதிகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

அதன் வெளிப்பாடாக செல்போன் பேசி வாகனம் ஓட்டுதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், சீட் பெல் அணியாதவர்கள், சிக்னல் விதிமீறல், லோடு வாகனங்களில் ஆட்களை ஏற்றும் வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் மீது, கடந்த சில ஆண்டுகளாக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அபராதம், விழிப்புணர்வு அதிகரித்தாலும் விதி மீறலும் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. நகரம் மற்றும் கிராமங்களில் டூவீலரில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் செல்லும் டூவீலரில் 3 ம்ற்றும் 4 பேர் வரை அமர்ந்து செல்வதால், ‘பேலன்ஸ்’ கிடைக்காமல் எளிதில் விபத்தில் சிக்குகின்றனர்.இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கோவிலூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நான்கு பேர் அங்கிருந்து பழைய பஸ் பேருந்து நிலையத்திற்கு ஒரே டூவீலரில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.தெற்கு போலீஸ் ஸ்டேஷன் அவுட்போஸ்ட் இருந்தும் அவர்கள் கண்டு கொள்வதில்லை. கண்டிப்பு இல்லாததால் இது போன்ற விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

சாலை பாதுகாப்பு வாரத்தை விதவிதமான ஐடியாக்களோடு கொண்டாடும் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், இது போன்ற மாணவர்கள் டூவீலரில் செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
First published: January 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்