Home /News /tamil-nadu /

வெல்லமண்டி நடராஜன் உள்பட 4 பேர் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமனம்.. ஓபிஎஸ் அறிவிப்பு

வெல்லமண்டி நடராஜன் உள்பட 4 பேர் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமனம்.. ஓபிஎஸ் அறிவிப்பு

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

    வெல்லமண்டி நடராஜன் உள்பட நான்கு பேரை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அண்மையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோரை நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கம் செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து, கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக, அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜெயபிரதீப் உட்பட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 18 பேர் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்புக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்தார். இப்படி இரு தரப்பு மாறி மாறி கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வந்தனர்.

    இதனிடையே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். தொடர்ந்து, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்தும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக. கு.ப.கிருஷ்ணன், ஜே சிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

    இந்நிலையில், இன்று வெல்லமண்டி நடராஜன் உள்பட நான்கு பேரை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    வெல்லமண்டி நடராஜன் - கழக அமைப்புச் செயலாளர், ஆர்.டி.ராமச்சந்திரன் - கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், சி.திருமாறன் - கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர், ஆர்.வி.பாபு - கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஆகியோருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: ADMK, OPS, OPS - EPS

    அடுத்த செய்தி