ஊரடங்கு காரணமாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேலூரில் மணல் கடத்தலில் ஈடுப்பட்டவர்களை தடுக்க முயன்றனர். இதனால்ஆத்திரம் அடைந்த கடத்தல்காரர்கள் காவலர்கள் மீது மினி வேன் ஏற்ற முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், உலகமெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் வாகன தணிக்கை மற்றும் வைரஸ் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி மணல் கடத்துபவர்கள் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.
இதனிடையே குடியாத்தம் அடுத்த ஒலகாசி பகுதியிலுள்ள பாலாற்றில் மணல் அள்ளிக் கொண்டு இருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான காவலர்கள் பாலாற்றில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பாலாற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த மினி வேனை காவலர்கள் தடுத்து நிறுத்திய போது மினி வேனை நிற்காமல் காவலர்கள் மீது ஏற்றுவது போல் வேகமாக சென்றது.
உடனடியாக பின்தொடர்ந்த காவலர்கள் மினி வேனை மறித்து வேனில் இருந்த குமரவேல், விஜிகுமார், சுரேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.