சீர்காழியில் வாகனத்தில் சென்றவர்களை எட்டி உதைத்து விபத்தை ஏற்படுத்திய 4 பேர் கைது

சீர்காழியில் வாகனத்தில் சென்றவர்களை எட்டி உதைத்து விபத்தை ஏற்படுத்திய 4 பேர் கைது

சீர்காழியில் வாகனத்தில் சென்றவர்களை எட்டி உதைத்து விபத்தை ஏற்படுத்திய 4 பேர் கைது

சீர்காழி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை எட்டி உதைத்து விபத்தை ஏற்படுத்திய 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • Share this:
சீர்காழி அருகே பூம்புகார் கிராமத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் அவரது சகோதரி சுகவேணி ஆகியோர், மங்கைமடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, அங்கு முன்விரோதம் காரணமாக  காத்திருந்த கீழமூவர்கரையைச் சேர்ந்த சந்தோஷ், ஸ்டீபன், குணா, ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற சுகவேணி மற்றும் வினோத்தை மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து  துரத்திச் சென்று எட்டி உதைத்துள்ளனர்.

இதில் சுகவேணி மற்றும் வினோத் சுவற்றின் மீது மோதி படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த இவர்கள் இரண்டு பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதைத்தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு இருவரையும் மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இதுகுறித்து சுகவேணி அளித்த புகாரின் பேரில், சந்தோஷ் ஸ்டீபன் உள்ளிட்ட 4 பேர் மீது  கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து திருவெண்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் கடந்த 12ஆம் தேதி கீழமூவர்கரை மற்றும் பூம்புகார் இரு கிராம மீனவர்களிடையே கடலில் ஏற்பட்ட பிரச்சனையில் இரு தரப்பினரும் மேதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க...இன்று விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்

இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை  தரப்பில் கூறப்படுகிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: