புனேவில் இருந்து 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தது

கொரோனா தடுப்பூசி - மாதிரி படம்

புனேவில் இருந்து 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தது.

 • Share this:
  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியும்,சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வந்தது.

  இந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பூசிகள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்தும் வருகிறது.

  இந்நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான மூலம் 34 பார்சல்களில் 4 லட்சத்தி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் பெரியமேட்டில் உள்ள மத்திய மருத்துவ கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். தடுப்பூசி மருந்துகளை தட்டுப்பாடு உள்ள இடத்திற்கு அனுப்பி வைக்க உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: