திருவெறும்பூரில் 4 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிரடி

பணம்

டெம்போ டிராவல் வாகனத்திலிருந்து கணக்கில் வராத பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..

 • Share this:
  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் செக்போஸ்ட் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் பீடி கம்பெனி டெம்போ டிராவல் வாகனத்திலிருந்து கணக்கில் வராத 4 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

  திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போஸ்ட் அருகே வாகன தணிக்கையில் தேர்தல் பறக்கும் படையினர் நாராயணமூர்த்தி தலைமையில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது, தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த டெம்போ ட்ராவல் வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது, அதில் கணக்கில் வராத 4 லட்சத்து 13 ஆயிரத்து 200 ரூபாய் இருப்பது தெரியவந்தது,

  இது சம்பந்தமாக டெம்போ ட்ராவலர் டிரைவர் பாளையங்கோட்டையை சேர்ந்த முகமது காசிமிடம் விசாரணை செய்தபோது, இது செய்யது பீடி கம்பெனிக்கு சொந்தமானது என்றும் வசூல் செய்து வந்த பணம் என்றும் கூறியுள்ளார்.

  Must Read : 1 கோடி ரூபாய் பறிமுதல்: எம்.எல்.ஏ. கார் ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் கைது

   

  ஆனால் அதற்கு முறையான ஆவணம் இல்லாத தொடர்ந்து பறக்கும் படை அதிகாரி நாராயணமூர்த்தி திருவெறும்பூர் தேர்தல் அலுவலர் அன்பழகனிடம் ஒப்படைத்தார்.
  Published by:Suresh V
  First published: