ஊரடங்கு விதிமீறல்: 4,07,000 வாகனங்கள் பறிமுதல், ரூ.6.54 கோடி அபராதம் வசூல்

மொத்தம் 4 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது.

ஊரடங்கு விதிமீறல்: 4,07,000 வாகனங்கள் பறிமுதல், ரூ.6.54 கோடி அபராதம் வசூல்
(கோப்புப்படம்)
  • Share this:
ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 4 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. 4 லட்சத்து 98 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் இருந்து 4 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்தோடு, 6 கோடியே 54 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
First published: May 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading