தமிழக பாஜகவுக்கு 4 பொறுப்பு தலைவர்கள் நியமனம்!

தமிழக பாஜகவுக்கு 4 பொறுப்பு தலைவர்கள் நியமனம்!
தமிழக பாஜக அலுவலகம்
  • News18
  • Last Updated: November 8, 2019, 4:32 PM IST
  • Share this:
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக பாஜகவுக்கு 4 பொறுப்பு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜன் கடந்த செப்டம்பர் மாதம் தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து, தமிழக பாஜக தலைவர் பொறுப்பு காலியாகவே இருந்தது.

இந்த நிலையில், எம்.ஆர். காந்தி, பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகிய 4 பேர் தமிழக பாஜக பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.


தலைவர் பதவிக்கு இவர் வருவார், அவர் வருவார் என்று கூறப்பட்ட நிலையில், பொறுப்பு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் இப்போதைக்கு தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

First published: November 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்