தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மழை

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • Share this:
    சென்னையில் நேற்று காலை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக பெய்த மழையால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    சென்னை மட்டுமில்லாமல் திருவண்ணாலை, திருச்சி, திண்டுக்கல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கொடைக்கானல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது. திடீர் மழைக்கு வெப்பச்சலனமே முக்கிய காரணம். அதேநேரம் வங்கக்கடலில், புதுச்சேரியை மையமாக கொண்டு, வடக்கு மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களுக்கு இடையே மேலடுக்கு சுழற்சி உள்ளது. இது, நிலப்பகுதியை ஒட்டி நிலவுவதால், மேகங்கள் திரண்டு நின்று, மிதமாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published: