முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... எங்கே? எப்போது?

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... எங்கே? எப்போது?

மாதிரி படம்

மாதிரி படம்

சேலம், திருச்சி, மதுரை, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனீ மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அடுத்த 48 மணி நேரத்தில் தர்மபுரி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும், சேலம், திருச்சி, மதுரை, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்  காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்

திருமங்கலம் (மதுரை) 5, வத்ராப் (விருதுநகர்), மதுரை விமான நிலையம், ஆண்டிபட்டி (தேன), எட்டயபுரம் (தூத்துக்குடி) தலா 3, காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 2, வேப்பூர் (கடலூர்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்) தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Weather Update