சிசிடிவி கேமரா... துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு...! புதுக்கோட்டையில் நடந்த மொய் விருந்தில் 4 கோடி ரூபாய் வசூல்

உற்றார், உறவினர்கள் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டாடும் கலாச்சார திருவிழாவாக உருவெடுத்துள்ள மொய் விருந்து, ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையையே மேல்நோக்கி காட்டுகிறது.

Web Desk | news18
Updated: July 26, 2019, 1:01 PM IST
சிசிடிவி கேமரா... துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு...! புதுக்கோட்டையில் நடந்த மொய் விருந்தில் 4 கோடி ரூபாய் வசூல்
புதுக்கோட்டையில் நடந்த மொய் விருந்து விழா
Web Desk | news18
Updated: July 26, 2019, 1:01 PM IST
புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் நடைபெற்ற மொய் விருந்து விழாவில் 4 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. 

சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட இந்த மொய் விருந்து விழா, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது இந்த பகுதி மக்களின் வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாக மாறியுள்ளது.

ஆண்டுதோறும் ஆடி, ஆவணி மாதங்களில் நடைபெறும் மொய் விருந்து விழா தற்போது தொடங்கியுள்ளது. வடகாட்டில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் நடத்திய மொய்விருந்தில் 4 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.


சிசிடிவி கேமிரா காட்சி, துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர்கள், தனியார் வங்கி சார்பில் அமைக்கப்பட்ட ஸ்டால் என அமர்க்களமாய் நடைபெற்ற மொய் விருந்தின் மூலம் ஆடு வியாபாரிகள் முதல் அச்சக தொழில் செய்வோர் வரை பலர் பயன்பெறுகின்றனர்.மொய் விருந்தின் மூலம் கடந்த ஆண்டு 500 கோடி ரூபாய் வரை வசூலான நிலையில், கஜா புயல் பாதிப்பின் காரணமாக இந்தாண்டு மொய்தொகையின் விகிதாச்சாரம் குறையும் என்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்கள்.

மொய் விருந்தின் மூலம் கிடைக்கும் பணத்தை தொழில் செய்வது, விவசாய கடன்களை அடைப்பது என பல்வேறு விதங்களில் பயன்படுத்துவதாகவும், அதனையே முறையற்ற வகையில் செலவு செய்தால் வாழ்க்கை கீழ் நோக்கி செல்லும் நிலை ஏற்படும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த வசந்தா தெரிவித்துள்ளார்.

மொய் விருந்தில் சாப்பிடும் கிராம மக்கள்


உற்றார், உறவினர்கள் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டாடும் கலாச்சார திருவிழாவாக உருவெடுத்துள்ள மொய் விருந்து, ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையையே மேல்நோக்கி காட்டுகிறது.

Also see... ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்கில் மறைந்துள்ள அரசியல்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...