• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மக்கள் மீது பிரதமர் மோடிக்கு சிறிதும் அக்கறை கிடையாது: மு.க.ஸ்டாலின்

மக்கள் மீது பிரதமர் மோடிக்கு சிறிதும் அக்கறை கிடையாது: மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைவதால், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இறுதி கட்டப் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மக்களை பற்றி பிரதமர் மோடிக்கு சிறிதும் அக்கறை கிடையாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

பாஜக இந்தியாவில் இருந்து அடியோடு அழிக்கப்படும்

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து அக்கட்சி தலைவர் ஸ்டாலின் திறந்த வேனில் சென்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தான் பாஜக உடன் கூட்டணி குறித்து பேசவில்லை என்றும், பாஜகவின் அக்கிரமத்தை பற்றித்தான் பேசி வருவதாகவும் விளக்கமளித்தார். 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்று விமர்சித்த அவர், இந்த தேர்தலோடு பாஜக இந்தியாவில் இருந்தே அடியோடு அழிக்கப்படும் என்று உறுதிபடக் கூறினார்.

தோல்வி பயத்தாலேயே திமுகவிற்கு அமமுக உதவுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிவருவதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அமமுக வேட்பாளரை ஆதரித்து தினகரன் பிரசாரம்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சுந்தரராஜனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன், கோரம்பள்ளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் திறந்த வேனில் சென்று வாக்குசேகரித்தார். அப்போது பேசிய அவர், வரும் 23-ம் தேதியை துரோகிகள் ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும் என்று கூறினார். தோல்வி பயத்தாலேயே திமுகவிற்கு உதவுவதற்காக அமமுக தேர்தலில் போட்டியிடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

தனிக்கட்சி தொடங்குபவர்களால் எம்ஜிஆராகி விட முடியாது

சூலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பாஜக உடன் கூட்டணி வைத்த அதிமுகவிற்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றார். தனிக்கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் முதலமைச்சராகிவிட முடியாது என்றும் தனிக்கட்சி ஆராம்பித்தவர்கள் எல்லாம் எம்ஜிஆராகி விட முடியாது என்றும் கமல்ஹாசனை சாடினார்.

ஸ்டாலினின் முதல்வர் கனவு நிறைவேறாது - பிரேமலதா

அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். அப்போது, கொல்லை புறமாக சென்று ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் முயற்சிப்பதாகவும், அது ஒருபோதும் நிறைவேறாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைவதால், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இறுதி கட்டப் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... காங்கிரஸில் இணைய தமிழிசை முயற்சித்தார்! - சர்ச்சைக் கிளப்பும்


Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: