• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கருணாநிதி புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம்: ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

கருணாநிதி புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம்: ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

ஸ்டாலின் - முதல்வர்

ஸ்டாலின் - முதல்வர்

திமுக ஆட்சிக்கு வந்ததும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக தனது தந்தையின் மறைவை வைத்து ஸ்டாலின் பொய் தகவல்களை பரப்பி வருவதாகவும், கருணாநிதியின் புகழுக்கு களங்கத்தை விளைவித்துவிட வேண்டாம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் பேருந்து நிலையம் முன்பு திறந்த வேனில் சென்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட 65 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வீடு கட்ட வாங்கிய கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், மக்களின் அனுதாபத்தை பெற தந்தை என்றும் பார்க்காமல் கருணாநிதி மறைவை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

ரூ.2,000 வழங்கும் திட்டத்தை திமுக தடுக்கவில்லை: ஸ்டாலின்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சி தலைவர் ஸ்டாலின், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு எதிராக திமுக வழக்கு தொடந்ததாக முதலமைச்சர் பொய் பிரசாரம் செய்து வருவதாகவும், தேர்தலில் திமுக வெற்றி பெற்று வந்த பிறகு இத்திட்டத்தை செயல்படுத்துவோம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

அமமுக வேட்பாளரை ஆதரித்து தினகரன் பிரசாரம்

அரவக்குறிச்சி தொகுதி அமமுக வேட்பாளர் சாகுல் அமீதை ஆதரித்து அக்கட்சியின் பொதுசெயலாளர் தினகரன் அரவக்குறிச்சியில் வாக்குசேகரித்தார். அப்போது பேசிய அவர், தோல்விபயத்தால் தன்னை தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க ஆளும் தரப்பினர் முயற்சிப்பதாகவும், எத்தனை வழக்குகளை தொடர்ந்தாலும் சந்திக்க தயார் என்றும் கூறினார்.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அன்புமணி வாக்குசேகரிப்பு

அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், மக்கள் நலனை முன்வைத்தே அதிமுக தலைமையிலான கூட்டணி அமைந்திருப்பதாகக் கூறினார்.

தமிழக அரசு மீது கோவை சரளா விமர்சனம்

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து பேசிய நடிகை கோவை சரளா, குடிநீர், விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

இந்து தீவிரவாதம் குறித்த தனது பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்ததால் கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இன்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

Also see...நாக்கை அறுப்பேன்னு சொன்னதை கமல் அட்வைஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: