• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாளை தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்!

நாளை தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்!

News18

News18

23-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, 10 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தினார்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

இதற்காக, வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, காணொலி காட்சி மூலம், 10 மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் சுமார் ஒன்றரை மணிநேரம் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லுதல், வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணித்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரங்கள் குறித்து பயிற்சி அளிப்பது குறித்தும் சத்யபிரதா சாஹு அறிவுரை வழங்கினார்.

இதனிடையே, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பரங்குன்றம் திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் துணை ராணுவப் படையினர் கைகளில் துப்பாக்கி ஏந்தியவாறு கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு விடுத்தனர்.

இந்நிலையில், வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாகாப்பு அறைகளின் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்தார்

இதேபோல, வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

Also see... சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் ரஜினி கூட்டணி சேருவார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: