முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கே.என்.நேரு... ஆபாச பேச்சு, ஓட்டுக்கு பணம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு...

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கே.என்.நேரு... ஆபாச பேச்சு, ஓட்டுக்கு பணம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு...

கே.என்.நேரு

கே.என்.நேரு

முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு மீது முசிறி காவல்நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது பற்றியும், ஆபாசமாக பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் கே.என் நேரு மீது வழக்கு பாய்ந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

திருச்சி மாவட்டம் முசிறியில் தி.மு.க தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக திமுக முதன்மை செயலாளரும் திருச்சி மேற்கு வேட்பாளருமான கே.என்.நேரு கடந்த சில நாட்களுக்கு முன்பு முசிறிக்கு சென்றார். அப்போது வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுப்பது குறித்த பேச்சு வந்துள்ளது. கட்சி நிர்வாகிகளுடன் பேசும் போது அதிமுகவினர் 500 ரூபாய் கொடுக்கின்றனர் என ஒருவர் கூறியுள்ளார். அப்போது   கே.என்.நேரு ஆபாசமாகவும் ஒரு சமூகத்தை இழிவாகவும் பேசி, நாம் 200 கொடுத்தால் போதும் என பேசும் வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாக பரவியது.

இதையடுத்து தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர் பத்பநாபன் முசிறி காவல்  நிலையத்தில் அளித்த புகாரையடுத்து,  294 பி - பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், 171 E- பரிசு பொருள் கொடுப்பதாக கூறுவது, 171  H- பணம் கொடுக்க தூண்டுதல், 506 (1) கொலைவெறி தாக்குவதாக கூறுதல், ஐ.டி தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா குறித்த சர்சையில் கே.என்.நேரு தனக்கு தொடர்பில்லை. திட்டமிட்ட அவதூறு என்று மறுத்தாலும், அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி அதிமுக, நாம் தமிழர் வேட்பாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க... இன்று சட்டமன்ற தேர்தல் : காலை 7 மணி முதல் வாக்களிக்கலாம்...

இப்போது முசிறி தொகுதியில் பணப்பட்டுவாடா மற்றும் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட சமூக வலைதள வீடியோ பரவலால், மீண்டும்  திமுக முதன்மைச் செயலாளர்  கே.என்.நேரு சர்ச்சையில் சிக்கியுள்ளது திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: KN Nerhu, TN Assembly Election 2021, Trichy