4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்? அமைச்சர் பதில்!

4 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சி நேற்று முந்தினம் அறிவித்தது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

news18
Updated: April 15, 2019, 9:29 AM IST
4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்? அமைச்சர் பதில்!
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
news18
Updated: April 15, 2019, 9:29 AM IST
அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வரும் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எஞ்சிய சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. தற்போது, அனைத்து கட்சிகளும் மக்களவை மட்டும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு சேகரிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், 4 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சி நேற்று முந்தினம் அறிவித்தது.

அதன்படி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணனும், அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியும், சூலூரில் பொங்கலூர் பழனிசாமியும், ஓட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையாவும் களமிறங்குகின்றனர்.

அதேசமயம், அதிமுக தரப்பில் இருந்து வேட்பாளர்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. மதுரையில் செய்தியாளர் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, முதலில் திமுக வேட்பாளர்களை பட்டியலை அறிவித்திருந்தாலும், வெல்லப்போவது அதிமுகதான் என தெரிவித்தார்.

விருதுநகரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், சட்டமன்ற உறுப்பினர் மறைவால் இடைத் தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
Loading...
கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின்னரே அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...