• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சீர்காழி அருகே பறவைகளை வேட்டையாடிய 4 பேர் கைது !

சீர்காழி அருகே பறவைகளை வேட்டையாடிய 4 பேர் கைது !

நான்கு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி தரணிதரன் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • Share this:
    சீர்காழியில் வனப்பறவைகளை வேட்டையாடிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    சீர்காழி அருகே பனமங்கலம் பகுதியில்  உள்ள காட்டுப்பகுதியில்  பறவைகள் அதிகம் வருகின்றன. அவற்றை சீர்காழியை சேர்ந்த ஜார்ஜ் பிரபாகரன், வெற்றிச்செல்வன், ஹரிஹரன், ரமேஷ் ஆகிய 4 பேரும் இரண்டு துப்பாக்கி வைத்துக்கொண்டு பறவைகளை வேட்டையாடி கொண்டிருந்தனர்.

    இதுதொடர்பாக  வனத்துறையினர் மற்றும் காவல் துறைக்கு  அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ரகசிய தகவல் அளித்துள்ளனர், அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று கொக்கு, காட்டுபுறா, கெளதாரி உள்ளிட்ட 10க்கும் மேற்ப்பட்ட  பறவைகளை வேட்டையாடியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட பறவைகளையும் வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் கார் ஆகியவற்றை சீர்காழி வனத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரையும் சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் .

    அவர்கள் நான்கு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி தரணிதரன் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: