ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் பெண், வீட்டில் உயிரிழந்த வழக்கில் 3வது கணவர் லட்சுமணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், பல ஆண்களுடன் போனில் பேசி வந்ததால் மனைவியை கொலை செய்ததாக கணவர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் ராஜீவ் காலனியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பிருந்து காளீஸ்வரி என்பவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டிற்குள் காளீஸ்வரி கடந்த 14 ஆம் தேதி ரத்தக் காயத்துடன் இறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் கிருஷ்ணன்கோவில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் வந்து பார்த்தபோது பின் தலையில் காயம், வாயிலிருந்து ரத்தம் வழிந்து கழுத்துப் பகுதியில் நகக் கீறல்களுடன் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீசார் சம்பவ இடத்தை பார்த்தபோது சந்தேக மரணம் என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் சிவகாசி ஜமீன்சல்வார் பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் கைது செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர் லட்சுமணன் கொடுத்த வாக்குமூலத்தில், உயிரிழந்த காளிஸ்வரிக்கு, தான் 3 வது கணவர் எனவும், உயிரிழந்த காளீஸ்வரி தனக்கு 2 வது மனைவி என்றும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், பல நபர்களுடன் அவர் போனில் பேசியதால் தான் அவரை கொலை செய்துவிட்டு, தானும் தூக்கில் தொங்க கயிறு கட்டியதாகவும் பின்னர் ஏதோ ஒருவித அச்சத்தில் தூக்கில் தொங்காமல் ஓடிவிட்டதாகவும் தெரிவித்தார்.
Must Read : ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய ஆர்டிஓ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது - உயர்நீதிமன்றம்
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட லட்சுமணனை கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் - M. செந்தில்குமார், சிவகாசி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.