ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகம் முழுவதும் 10 நாட்களில் 3,963 கைதிகள் ஜாமினில் விடுதலை..!

தமிழகம் முழுவதும் 10 நாட்களில் 3,963 கைதிகள் ஜாமினில் விடுதலை..!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கடந்த 2 நாட்களில் சென்னை புழல் சிறையிலிருந்து 200 கைதிகள் ஜாமினில் விடுதலையாகி தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 3963 கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

  தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகளாகவும், 30 சதவீதம் பேர் தண்டனைக் கைதிகளாகவும் உள்ளனர். இந்த நிலையில், சிறைகளில் கைதிகள் கூட்டமாக ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு கொரோனா தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், இதனால் சிறிய குற்றங்களில் ஈடுபட்டுள்ள விசாரணைக் கைதிகளை ஜாமினில் வெளியே அனுப்பலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

  இதன் அடிப்படையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை, கடந்த 10 நாட்களில் 3,963 சிறைக்கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்ட 50 சதவீதம் பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் சென்னை புழல் சிறையிலிருந்து 200 கைதிகள் ஜாமினில் விடுதலையாகி தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

  Also see...

  masks

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Prisoners