ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொரோனா முன்கள பணியாளர்களுக்காக 38 மின்சார ரயில்கள் இயக்கப்படுவதாக தகவல்..

கொரோனா முன்கள பணியாளர்களுக்காக 38 மின்சார ரயில்கள் இயக்கப்படுவதாக தகவல்..

கோப்பு படம்

கோப்பு படம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அத்தியாவசிய மற்றும் முன்கள பணியாளர்களுக்காக சென்னையில் இன்று முதல் 38 மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

   ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் வழக்கமான வாகன போக்குவரத்து சேவைகள் தொடங்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், பொது மக்களுக்காக மின்சார ரெயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

  ஊரடங்கு காலத்தில் கொரோனா முன்களப்பணியாளர்களுக்காக தெற்கு ரெயில்வே சார்பில் கடற்கரை-செங்கல்பட்டு, வேளச்சேரி, மூர்மார்க்கெட்-அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் 28 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய அரசு பணியாளர்களுக்கும் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த மின்சார ரெயிலில் அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

  இந்நிலையில் கூடுதலாக 10 மின்சார ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 38 மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரெயில்களில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Published by:Gunavathy
  First published:

  Tags: CoronaVirus, Indian Railways