முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Omicron Cases: தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று - சுகாதாரத்துறை தகவல்

Omicron Cases: தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று - சுகாதாரத்துறை தகவல்

BREAKING NEWS

BREAKING NEWS

Omicron in Tamil Nadu | இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகம் வந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதுதான் தமிழகத்தின் முதல் ஒமைக்ரான் பாதிப்பாக இருந்தது. இதையடுத்து அவருடன் தொடர்புடைய மற்றும் பயணித்தவர்களையும் சேர்த்து 89 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருந்தது. இவர்களில் 13 பேரின் முடிவுகளில் ஒமைக்ரான் தொற்று இல்லை என்பது உறுதியானது. மேலும் 41 பேரின் மாதிரி முடிவுகளில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதை விரைவில் அதிகாரப்பூர்வமாக சுகாதாரத்துறை அறிவிக்கும் என கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 34 ஆக தற்போது உள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 57 பேருக்கும், தெலங்கானாவில் 24 பேருக்கும், கர்நாடகாவில் 19 பேருக்கும், ராஜஸ்தானில் 18 பேருக்கும், கேரளாவில் 15 மற்றும் குஜராத்தில் 14 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்கரான் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

First published:

Tags: CoronaVirus, Omicron