• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரோல்ஸ் ராய்ஸ் கார், அமெரிக்க டாலர், வைர நகைகள்... முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

ரோல்ஸ் ராய்ஸ் கார், அமெரிக்க டாலர், வைர நகைகள்... முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

கே.சி.வீரமணி

கே.சி.வீரமணி

. 2016 சட்டமன்றத் தேர்தலின் போது கே.சி.வீரமணி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் மற்றும் 2021 தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் அதிக அளவில் மாற்றமடைந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

  • Share this:
    முன்னாள் அமைச்சர் வீரமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் நடைபெற்ற சோதனையில்  ரூ.34 லட்சம் ரொக்கம், அமெரிக்க டாலர், சொகுசு கார்கள், நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக   லஞ்ச ஒழிப்புத்துறை  தெரிவித்துள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை முன்னாள் சட்டமன்ற அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.சி வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்  தொடர்புடைய  இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பாத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தார்.

    சென்னை, ஜோலார்பேட்டை ஆகிய இடங்களிலும்,  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள குருவிமலை கிராமத்தில் உள்ள கே.சி வீரமணி உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சென்னை சாந்தோமில் உள்ள கே.சி.வீரமணி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல, அதிமுக ஒன்றிய செயலாளர் கர்ணல் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்றது. வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் உள்ள இவருடைய இல்லத்தில் தற்போது சோதனை நடைபெற்றது.  இவர் கே.சி.வீரமணிக்கு பினாமி என்று கூறப்படுகிறது.

    வருமானத்துக்கு அதிகமாக 654% சொத்து சேர்ப்பு

    வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீதம் அளவிற்கு சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 2016 சட்டமன்றத் தேர்தலின் போது கே.சி.வீரமணி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் மற்றும் 2021 தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் அதிக அளவில் மாற்றமடைந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: வருமானத்தை விட 654% கூடுதல் சொத்து.. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு!


    623 சவரன் தங்கம், 30 லட்சம் மதிப்பில் மணல்

    இந்நிலையில், சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  வீரமணி , அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் மற்றும் அவரது தொடர்பில் உள்ளவர்களுக்கு சொந்தமாக  சென்னையிலுள்ள 6 இடங்கள், பெங்களூருவில் உள்ள 2 இடங்கள் உட்பட 35 இடங்களில் இன்று சோதனை  நடத்தப்பட்டது.

    இதில், ரூ.34 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 1.80 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்,  ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கணினி ஹார்டு டிஸ்க், 623 சவரன் தங்க நகைகள்,  47 கிராம் வைர நகைகள், 7.2கிலோ வெள்ளி பொருட்கள்,  வங்கி புத்தகம்,  சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலுள்ள  275 யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: