ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

34 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

34 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு

ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு

45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, 45 பேரில் 27 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

34 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் 45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அதில் 27 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 • ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு:

34 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணை செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

 • செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன் ஐஏஎஸ், திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணை அரசு செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு.
 • பள்ளிக்கல்வித்துறை ஆணையர் த.நந்தகுமார் ஐஏஎஸ் உள்ளிட்ட 27 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அரசு செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:

  45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட 45 பேரில் 27 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

  5 ஐபிஎஸ் அதிகாரிகள் ஐஜியில் இருந்து கூடுதல் டிஜிபியாகவும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஐஜியில் இருந்து ஐஜியாகவும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்பியில் இருந்து டிஐஜியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உளவுதுறை ஐஜி ஈஸ்வர மூர்த்தி கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வுடன் தமிழக காவல்துறை அகடெமி கூடுதல் டிஜிபியாக நியமனம்.

  • மதுரை மாநகர் காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் நியமனம்.
  • சென்னை மாநகரின் தென் பகுதி சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பணியில் இருந்த K.S. நரேந்திரன் நாயர், மதுரை மாநகர் காவல்ஆணையராக நியமனம்
  • தற்போது வரை மதுரை மாநகர் காவல் ஆணையராக இருந்த செந்தில்குமார், சென்னைக்கு மாற்றம்
  • காவல்துறை பயிற்சி பள்ளி ஐஜி அருண், பதவி உயர்வு உடன் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம்
  • திருச்சி கமிஷனர் கார்த்திகேயன் மத்திய மண்டல ஐஜியாக நியமனம்.
  • கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன், பதவி உயர்வு உடன் காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமனம்.
  • காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்திய பிரியா , பதவி உயர்வு உடன் திருச்சி மாநகர ஆணையராக நியமனம்
  • மதுரை மாநகர் காவல் துணை ஆணையராக இருந்த, மோகன்ராஜ், கள்ளகுறிச்சி மாவட்ட எஸ்பியாக நியமனம்
First published:

Tags: IAS Transfer, IPS Officers, Tamilnadu govt