ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் 33000 விவசாயிகள் பயிர்க்காப்பீடு!

நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் 33000 விவசாயிகள் பயிர்க்காப்பீடு!

மாதிரி படம்

மாதிரி படம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீட்டு பதிவுக்கு நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவில் மட்டும் 33 ஆயிரம் விவசாயிகள் புதிதாக பயிர்க் காப்பீடு செய்துள்ளனர்.

  நடப்பு பருவத்துக்கான பயிர்க்காப்பீடு செய்வதற்கான அவகாசம் கடந்த 15-ம் தேதி நிறைவடைந்தது.

  இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, பயிர்க் காப்பீட்டுக்கு பதிவுசெய்வதற்கான அவகாசத்தை நேற்று வரை மத்திய அரசு நீட்டித்தது.

  இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீட்டிக்கப்பட்ட காலத்தில், 61 ஆயிரத்து 365 ஏக்கர் நிலப்பரப்புக்கான சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிருக்கு 33 ஆயிரத்து 258 விவசாயிகள் கூடுதலாக காப்பீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதன்மூலம், ஒட்டுமொத்தமாக 23 லட்சத்து 83 ஆயிரம் ஏக்கருக்கு 10 லட்சத்து 94 ஆயிரம் விவசாயிகள் பதிவுசெய்துள்ளனர். இது ஒட்டுமொத்த நிலப்பகுதியில் 88 சதவீதம் என்றும், கடந்த ஆண்டைவிட 17 சதவீதம் கூடுதல் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Agriculture, Farmer, Insurance