முழு ஊரடங்கில் மதுபானம் விற்ற 324 பேர் கைது் - சென்னை காவல்துறை

மதுபாட்டில்கள் பறிமுதல்

முழு ஊரடங்கில் சட்டவிரோத மதுபான விற்ற 324 பேரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கானது அமலில் இருந்து வருகிறது.இதனால் கல்வி கூடங்கள்,நிறுவனங்கள்,வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள் என அனைத்துமே இயங்க அரசு தடை விதித்துள்ளது.மேலும் போக்குவரத்து வசதிகளும் தடை செய்யப்பட்டுள்ளது.

  கடந்த 10ஆம் தேதி முதல் மதுபான கடைகள் மூடப்பட்டு இருப்பதை பயன்படுத்தி கொண்ட விஷமிகள் சிலர் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்று வருகின்றனர். மதுபிரியர்கள் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி செல்கின்றனர். சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானம் கடத்தி வந்து சென்னையில் கூடுதல் விலைக்கு விற்கபட்டும் வருகின்றனர்.

  இதுமட்டுமின்றி சோற்றை ஊறவைத்து சுண்டக்கஞ்சி தயாரித்தல், யூடியூப்பை பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வடசென்னை பகுதிகளான ஓட்டேரி, புளியந்தோப்பு, அன்னை சத்யா நகர், வில்லிவாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைப்பெற்று வருவது தெரியவந்து மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கைது செய்து வருகின்றனர்.

  Also Read : சென்னையில் காரில் வந்து ஆட்டை திருடிச் சென்ற ஜோடி! வெளியான சிசிடிவி வீடியோ

  சென்னையில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் நேற்று வரை சட்டவிரோதமாக மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்ததாக 271 வழக்குகளை சென்னை காவல்துறையினர் பதிவு செய்துள்ளது. மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்த 321 நபர்களை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா,கர்நாடகா போன்ற மாநிலங்கத்திலிருந்து கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள், கள்ளச்சாராயம், சுண்டக்கஞ்சி என மொத்தம் 4176 லிட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான பாட்டில்களை கடத்தி செல்ல பயன்படுத்தியதாக 31 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  அதேபோல தமிழகம் முழுவதும் இந்த மாதம் 1ம்தேதி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் மொத்தம் 25461 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 92 வாகனங்களும், 2ம்தேதி சோதனையின் போது மொத்தம் 23892 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 83 வாகனங்களும், 3ம்தேதி சோதனையின் போது மொத்தம் 15262 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 75 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
  Published by:Vijay R
  First published: