தமிழகத்தில் ஒரேநாளில் 31,079 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை மேலும் ஒருவாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரேநாளில் 31 ஆயிரத்து79 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 9 ஆயிரத்து 700-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 486 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை 22 ஆயிரத்து 775 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 31255 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 386 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.