30-ம் நாள்: நீல நிறம் பட்டாடை உடுத்தி காட்சியளிக்கும் அத்திவரதர்!

அத்திவரதரை கடந்த 29 நாட்களில் 42 லட்சத்து 50,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Web Desk | news18
Updated: July 30, 2019, 11:26 AM IST
30-ம் நாள்: நீல நிறம் பட்டாடை உடுத்தி காட்சியளிக்கும் அத்திவரதர்!
30-ம் நாளான இன்று அத்திவரதர்
Web Desk | news18
Updated: July 30, 2019, 11:26 AM IST
அத்திவரதர் வைபவத்தின் 30-ம் நாளான இன்று நீல நிறம் பட்டாடை உடுத்தி பல்வேறு வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 30-ம் நாளான இன்று நீல நிறம் பட்டாடை உடுத்தி பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இன்று நீண்ட வரிசையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அத்திவரதரை தரிசிக்க காத்திருக்கின்றனர். காலை 4.30 மணிக்கு கோபுர வாயில் திறக்கப்பட்ட பின்னர் தரிசனம் செய்ய குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகிறது என பக்தர்கள் தெரிவித்தனர்.


நாளை 12 மணிக்கே நடை சாத்தப்படும் 

மேலும் வருகிற 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். இதனால் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வி.வி.ஐ.பி. பாஸ் வைத்திருப்பவர்களுக்கு நேரம் குறைப்பு

Loading...

இதேபோல் வி.வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதியில்லை. டோனர் பாஸ் மற்றும் வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மதியம் 12 மணி வரையிலும், ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கியவர்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 1-ம் தேதி அதிகாலை 5 மணியில் இருந்து எப்போதும் போல பக்தர்கள் அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3-ம் தேதி 3 மணிக்கே நடை சாத்தப்படும்

ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால் அன்று மதியம் 3 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் முடிந்த பின்னர் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை தரிசிக்கலாம்.

ஆகஸ்ட் 15-ம் தேதி கருட சேவை உற்சவம்

அதேபோல் 15-ந்தேதி கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளதால் மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதேசமயத்தில் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் தினங்களில் மேலும் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுத்த உள்ளனர்.

நேற்று 29-ம் நாள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த 29 நாட்களில் 42 லட்சத்து 50,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை அமோக விற்பனை...

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...