வாக்காளர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்

பேருந்து

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக நாளை முதல் 5 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 3,090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 • Share this:
  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக நாளை முதல் 5 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 3,090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  ஏப்ரல் 1 (நாளை) முதல் 5 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி வழக்கமாக இயக்க கூடிய 2,225 பேருந்துகளுடன், 3,090 சிறப்பு பேருந்துள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. அதன்படி மொத்தம் 14,215 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

  நாளை முதல் 3 ஆம் தேதி வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், 4, 5 ஆகிய இரண்டு தேதிகளில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய பேருந்து நிலையங்கள், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

  Must Read :  ரயிலில் இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை?

  தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் உரிய கொரோனா பாதுகாப்பு நடவடவடிக்கைகளுடன் பயணம் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

  தமிழகம் மற்றும் புதுச்சேரிபில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: