Home /News /tamil-nadu /

தமிழகத்தில் விரைவில் புதிதாக 3000 காவலர்கள் தேர்வு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் விரைவில் புதிதாக 3000 காவலர்கள் தேர்வு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

MK Stalin | தமிழகத்தில் விரைவில் புதிதாக 3000 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அந்த துறைக்கு பொறுப்பாக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி 78 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,

    1) ஒருங்கிணைந்த சுங்கச்சாவடி கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்..

    2)இணையவெளி குற்றங்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க இணைய எச்சரிக்கை செயலி மற்றும் இணைய பாதுகாப்பு முகப்பு உருவாக்கப்படும்

    3) மதுவிலக்கு அமலாக்க பிரிவை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவுடன் இணைத்து போதை பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்க தெளிவாக மறு சீரமைக்கப்படும்.

    4) காணாமல் போன மற்றும் திருட்டு வாகனங்களை கண்டறியும் செயலி உருவாக்கப்படும்.

    6) இளம் மற்றும் முதல் முறை குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பறவை என்னும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும்..

    7) சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க பருந்து என்ற செயலி உருவாக்கப்படும்

    8) திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு ஆளுநர்களுக்கு 5 சதவீத சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.

    9 )காவலர்களுக்கான மகிழ்ச்சி என்ற நலச் செயல் திட்டம் செயல்படுத்தப்படும்.

    10) காவலர்களுக்கு நிரந்தர முழு உடல் ஊனத்திற்கு வருடாந்திரம் வழங்கப்படும் மொத்த காப்பீட்டுத் தொகை 30 இலட்சம் 60 லட்சமாக உயர்த்தப்படும்.

    11) சமூகத்தில் போதைப்பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும் உண்மையாகவும் உழைக்கும் காவலர்களை ஊக்குவிக்க மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும்.

    12) பெண் காவலர்களுக்கான பணி வாழ்க்கை சமநிலை குறித்த பயிற்சியினை ஆனந்தம் என்கிற திட்டத்தின் மூலம் வழங்கப்படும்..

    13) சென்னை காவல் ஆணையரத்தில் இரண்டு காவல் துணை ஆணையர் பதவிகள், இரண்டு காவல் உதவி ஆணையர் பதவிகள் உருவாக்கப்படும்.

    14) சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை நிர்வகிக்க கூகுள் நிலப்படம் மூலம் தானியங்கி எச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்படும்..

    15) புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு இரண்டு புதிய இயங்கும் தடைய அறிவியல் ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.

    16) தீயணைப்பு பணியாளர்கள் இடர்படி உயர்த்தி வழங்கப்படும்..

    காவல் துறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடர்படி உயர்த்தி வழங்கப்பட்டது போன்று நிலைய அலுவலர் மற்றும் அதன் கீழ்பணி நிலையில் உள்ள தீயணைப்பு பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூபாய் 800 லிருந்து 1000 ஆகவும் உதவி மாவட்ட அலுவலர் மற்றும் மாவட்ட அலுவலர் நிலையில் உள்ள பணியாளர்களுக்கு ரூபாய் 900 த்தில் இருந்து 1000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்

    17) ஆளில்லா விமான அலகு காவல்படை பிரிவு ரூ.1.20 கோடி மதிப்பில் விரிவு செய்யப்படும்.

    18) சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சிக் கல்லூரி, வண்டலூர் அருகே உள்ள உயர் காவல் பயிற்சியக வளாகத்திற்கு மாற்றப்படும் என்பது உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: DMK, MK Stalin, TN Assembly

    அடுத்த செய்தி