Home /News /tamil-nadu /

3,000 கிராம் தங்கம்.. ரூ.49 லட்சம் ரொக்கம் - அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டில் சிக்கியது என்ன?

3,000 கிராம் தங்கம்.. ரூ.49 லட்சம் ரொக்கம் - அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டில் சிக்கியது என்ன?

விஜயபாஸ்கர் - எஸ்.பி.வேலுமணி

விஜயபாஸ்கர் - எஸ்.பி.வேலுமணி

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனையில் சிக்கியது என்னவென்ற விவரம் வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்பான 26 இடங்களிலும் சி.விஜயபாஸ்கர் தொடர்பான 13 இடங்களிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான மதுரை தேனி புதுக்கோட்டை திருவள்ளூர் தாம்பரம் ஆகிய 13 இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை அடையாறில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.

    முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 16.37 லட்சம் , 1,872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோகிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 சிடி, 1 பென்டிரைவ், 2 - ஐ போன்கள் மற்றும் 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் இவ்வழக்கின் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளது.

    Also Read : இந்துக்கள் குறித்து ஆ.ராசா அப்படி என்னதான் பேசினார்.. பாஜக கோபம் ஏன்? - முழு விபரம்

    அதேபோல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் ரூ.32.98 லட்சம் ரொக்கமும், 1228 கிராம் தங்க நகைகளும், 948 கிராம் வெள்ளிப் பொருட்களும் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டன. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் மற்றும் 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, Income Tax raid, SP Velumani, Vijaya Baskar

    அடுத்த செய்தி