3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமிராக்கள்: தமிழக அரசு நடவடிக்கை

கோப்புப்படம்

ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 சிசிடிவி கேமிராக்கள் என மொத்தமாக 3000 டாஸ்மாக் கடைகளில் 6000 சிசிடிவி கேமிராக்களை பொருத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

  • Share this:
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மண்டல வாரியாக எந்த கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தலாம் என அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதில் அதிகமாக மது விற்பனை நடக்கும் கடைகள், ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

கோயம்பேடாகும் மதுரை பரவைச் சந்தை?

தனிமைப்படுத்தப்படும் கைதிகள்: புதுச்சேரி சிறைச்சாலையில் வேகமாக பரவும் கொரோனா..

சென்னை மண்டலத்தில் 535 கடைகள், கோயம்புத்தூர் மண்டலத்தில் 450 கடைகள், மதுரை மண்டலத்தில் 755 கடைகளில் சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட உள்ளன.
Published by:Vaijayanthi S
First published: