தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ளது லிங்கம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து சில வீடுகளும் சேதமடைந்தன.
அக்கிராமத்தின் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே இருந்த சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரமும் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த பள்ளி சத்துணக்கூடத்தின் மேலே சரிந்து விழுந்தது.
இத்தனை ஆண்டுகளாக கிராம மக்களுக்கு நிழல் தந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 3 தலைமுறைகளுக்கு மேலாக தங்களுடன் பயணித்து வந்த மரம் வேரோடு சரிந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத முதியவர்கள் சிலர் மரத்தின் பாகங்களைத் தொட்டுப் பார்த்து தங்கள் உணர்வுகளை கண்ணீர் துளிகளாக வெளிப்படுத்தினர்.
Also read: சுங்கச்சாவடி கட்டணமும் உயர்வு: மக்கள் எவ்வளவு அடிகளைத் தாங்குவார்கள்- மு.க.ஸ்டாலின் கண்டனம்
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மரத்திற்கு மௌன அஞ்சலியும் செலுத்தினர். இளைப்பாறுவதற்கு நிழல், தூய்மையான காற்று தந்து, தங்களின் வாழ்வியலுடன் இணைந்திருந்தது அந்த மரம் என அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kovilpatti