HOME»NEWS»TAMIL-NADU»300 sovereign gold robbery near sriperumbudur 2 policemen arrested vai

ஸ்ரீபெரும்புதூர் அருகே 300 சவரன் கொள்ளை- 2 காவலர்கள் கைது

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூர் அருகே கத்திமுனையில் 300 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 காவலர்கள் உட்பட 10 பேர் கைதாகியுள்ளனர். திருடர்களுடன் போலீஸார் கை கோர்த்தது எப்படி?

  • Share this:

சிறை கைதிகளுடன் ஏற்பட்ட பழக்கத்தால் இரண்டு காவலர்கள் தற்போது கைதியாகியுள்ளனர் . 300 சரவரன் நகை திருட்டு வழக்கில் சிசிடிவி குற்றவாளிகளை காட்டிக்கொடுத்தது எப்படி?

திருவள்ளூர் அசூதி தெரு பகுதியை சேர்ந்தவர் 52 வயதான மகேந்திரன். இவர் கீதாஞ்சலி என்ற நகை கடையை நடத்தி வருகின்றார். நகை விற்பனையுடன் சேர்த்து தங்ககட்டிகளை வாங்கி நகைகளை தயாரித்து ஸ்ரீபெரும்புதூர் , சுங்குவார்சத்திரம் , உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு நகைக் கடைகளுக்கு மொத்த விற்பனையும் செய்துவந்துள்ளார்.

கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி மகேந்திரன் அவரது மகன் ஆசிபுடன் வழக்கம் போல் நகைகடைகளுக்கு நகைகளை, ஆட்டோவில் சென்று சப்ளை செய்துள்ளனர். இறுதியாக சுமார் 300 சவரன் தங்க நகைகளோடு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி ஆட்டோ சென்றுள்ளது.



அப்போது மாம்பாக்கம் அருகே மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆட்டோவை வழிமறித்துள்ளது. கத்திமுனையில் நகை வியாபாரியை மிரட்டிய கும்பல், 1 கோடியே 11 லட்சம் மதிப்பிலான 300 சவரன் தங்க நகைபரித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் நகைகடை உரிமையாளர் மகேந்திரன் புகாரளித்தார். மூன்று தனிப்படைகளை அமைத்த போலீசார் நெடுஞ்சாலையில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கினர்.

சிசிடிவி காட்சிகளை கொண்டு நடத்திய விசாரணையில் ஏற்கனவே குற்றவழக்குகளில் தொடர்புடைய செங்குன்றத்தை சேர்ந்த 24 வயதான ரஞ்ஜூத்ராஜ் மற்றும் 20 வயதான ராகுலை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஆட்டோவில் கத்திமுனையில் கொள்ளையடித்ததை இருவரம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நிதியுதவி இன்று வழங்கப்படுகிறது...

இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 800 கிராம் தங்க நகைகளை கைபற்றினர். மேலும் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மானாமதி காவல்நிலையத்தில் பணியாற்றும் தமிழ் , மற்றும் திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்தில் பணியாற்றும் கதிர் என்ற இரண்டாம் நிலை காவலர்கள் இருவர்களையும் போலீசார் பிடித்துள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராகுல், ரஞ்ஜுராஜ் ஆகியோருடன் காவலர்கள் தமிழுக்கும் கதிருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறைசாலைக்கு அழைத்து செல்லும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நால்வரையும் நண்பர்களாக்கியுள்ளது , திருடர்களான ராகுல், ரஞ்ஜூத்ராஜ் மற்றும் காவலர்களான தமிழ் மற்றும் கதிர் கூட்டாக இணைந்து திருட திட்டம் போட்டுள்ளனர்.

ஏற்கனவே மகேந்திரன் கடையை குறிவைத்த திருடர்கள் அந்த கடையில் முன்னாள் ஊழியர்களாக பணியாற்றிய இருவருடன் கூட்டு சேர்ந்து திருட்டில் ஈடுப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை ராகுல், ரஞ்ஜூத் ராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவலர்களான தமிழ், கதிர் உள்ளிட்ட ஆறுபேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருடிய நகைகளை என்ன செய்தனர் திட்டம் போட்டது எப்படி என்று பிடிப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து நகைகடையின் முன்னாள் ஊழியர்களையும் போலீசார் பிடித்துள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: