மதுரை ஆவினில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மேலாளர், மற்றும் நிர்வாக பணியாளர்கள் என மொத்தம் 61 பணியிடங்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனங்களில், தகுதி இல்லாத நபர்களுக்கு பணி வழங்கியது, எழுத்து தேர்வு வினாத்தாள் வெளியானது, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது உள்ளிட்ட முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள் எழுந்தன.
ஆவின் ஓய்வூதிய சங்கம் சார்பில் அளிக்கப்பட்டு வந்த தொடர் புகாரின் எதிரொலியாக ஆவின் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்திருந்தது. மேலும், கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 81 படி பால்வளத்துறை துணை பதிவாளர் கணேசன் தலைமையிலும் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, எஸ்.பி. தலைமையிலும் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இத்தகைய விசாரணையின் தொடர்ச்சியாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மதுரை ஆவினில் நியமனம் செய்யப்பட்ட நபர்கள் முப்பதுக்கும் மேற்பட்டோரை, அவர்களின் பணிநியமன ஆணைகள், கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் தன் முன்னிலையில் ஆஜராகுமாறு பால்வளத்துறை துணை பதிவாளர் கணேசன் சம்மன் அனுப்பி உள்ளார்.
Must Read : ஒற்றை காலில் நொண்டி அடித்தே பள்ளிக்கு செல்லும் 10வயது சிறுமி.. ஆசிரியை ஆவதே கனவு - உதவிக்கரம் நீட்டிய நெட்டிசன்கள்
இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் பணி நியமனங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டால் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.