ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து: சென்னையை சேர்ந்த தம்பதி உட்பட 7பேர் பலி..

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து: சென்னையை சேர்ந்த தம்பதி உட்பட 7பேர் பலி..

விபத்தில் உயிரிழந்த சென்னை தம்பதியினர்

விபத்தில் உயிரிழந்த சென்னை தம்பதியினர்

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களின் உடலை தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kedarnath, India

  உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உலக பிரசித்தி பெற்ற குகைக்கோயிலுக்கு ஆண்டுதோறும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கேதார்நாத் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து, இந்த ஆண்டு யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

  இந்நிலையில் ஏராளமான பக்தர்கள் தற்போது இந்த குகைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பேருந்து  மார்க்கமாகவும் ஹெலிகாப்டர் மூலமாகவும் பக்தர்கள் கேதார்நாத் கோயிலுக்கு சென்று வருகின்றனர்.

  இந்நிலையில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த பிரேம்குமார், கலா, சுஜாதா உட்பட 6 யாத்ரீகர்கள் 'ஆர்யன் அவியேஷன்' நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் சென்று தரிசனம் முடிந்து திரும்பி கொண்டிருந்தனர். அப்போது 'கருட் சட்டி' என்ற இடத்துக்கு மேலே பறந்தபோது, ஹெலிகாப்டர் திடீரென நிலைத்தடுமாறி அங்கிருந்த மலையின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

  சென்னை திருமங்கலத்தை சேர்ந்த பிரேம்குமார், சுஜாதா தம்பதியினர் கடைசியாக நேற்று உத்திரகான்டில் உள்ள தனியார் மாலில் எடுத்த கடைசி புகைப்படம்.

  இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 1 விமானி, 6 யாத்ரீகர்கள் ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த இந்தோ - திபெத் போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்து உடல்களை மீட்டனர். உயிரிழந்த யாத்ரீகர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் எனவும் மீதம் 3 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களின் உடலை தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Helicopter Crash